Sep 25, 2012

Feedburner Zero Count பிரச்சினை

பீட்பர்னர் (Feedburner) என்பது நமது வலைத்தளத்தின் பதிவுகளை மின்ன்ஞ்சல் மூலமாக வாசகர்களுக்குச் சேர்ப்பதற்கும், RSS செய்தியோடை வசதியின் மூலம் பதிவுகளை வாசகர்களிடம் கொண்டு செல்லவும் பயன்படும் இலவச சேவையாகும். இதனை கூகிள் தான் நிர்வகித்து வருகிறது. தற்போது செப்டம்பர் 19 ந்தேதியிலிருந்து வலைப்பூக்களில் வைக்கப்பட்டிருக்கும் Feed count பட்டன்களில் வாசகர்களின் எண்ணிக்கை பூஜ்யமாகத் தோன்றியது.


ஆனால் புதிதாக யாரும் Subscribe செய்து சேர முடிந்த்து. நாம் எழுதும் புதிய பதிவுகள் சரியாக வாசகர்களுக்குச் சென்றது. வாசகர் எண்ணிக்கையை மட்டுமே தவறாக காட்டி வந்த்து.

இந்த பிரச்சினை பற்றி Feedburner Status பிளாக்கில் குறிப்பிட்டிருந்தது.
Subscriber Counts and Stats – We have been encountering difficulties with our stats production pipeline for data representing Sept 19 and Sept 20th ,2012. We are currently working to resolve the issue.
இதே போல இந்த பிரச்சினை இதற்கு முன்னும் சில தடவை நிகழ்ந்திருக்கின்றன. ஆனால் தற்போது இணையத்தில் பீட்பர்னர் சேவை மூடப்படலாம் என வதந்திகள் பரவி வந்தன.

ஏனெனில் பீட்பர்னருக்கான Forum, Twitter Account, Blog எல்லாமே மூடப்பட்டு விட்டன. அப்டேட் செய்யப்படாமல் இருப்பது ஃபீட்பர்னர் மட்டுமே. இறுதியாக பீட்பர்னருக்கான Google Developer பக்கத்தில் பீட்பர்னர் செயல்பாட்டுக்கான API (Application Programming Interface) வருகிற அக்டோபர் 20,2012 தேதியில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிலர் Feedburner API தான் மூடப்படுகிறது, Feedburner சேவையே நிறுத்தப்படாது என கூறுகின்றனர். இருப்பினும் இதனைப் பற்றி கூகிள் எதுவும் கூறாமல் இருந்து வந்தது.
சிலர் Feedburner க்கு மாற்றாக Feedblitz, MailChamp போன்ற கட்டண சேவைகளுக்கு மாறத் தொடங்கியிருந்தனர். நல்ல வேளையாக இன்று (25.09.2012) Feedburner Feed Count சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. கூகிளுக்கு நன்றி சொல்வோம்.

8 comments:

  1. இப்போதுதான் பார்த்தேன்! மகிழ்ச்சி! நன்றி விரிவான பதிவிற்கு!

    ReplyDelete
  2. தொடர்ந்து நம்பலாமா? சட்டுபுட்டுன்னு கடைய மூடிட மாட்டாங்க இல்லையா? :-))

    ReplyDelete
    Replies
    1. தெரில்ல பாப்போம்.:-)

      Delete
  3. மூன்று நாளாக '0' தான்....

    என் தளத்தில் அருகில் உள்ள மற்ற பட்டன்களை பெரிதாக்கினேன்...

    நேற்று முதல் வேலை செய்கிறது...

    ReplyDelete
  4. உண்மைதான் முதலில் எனது தளத்தில் தான் பிரச்சனை என்று எண்ணியிருந்தேன் பின்பு உங்கள் தளம் உட்பட பலரது தளத்தை பார்த்த பின்புதான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றிங்க

    எனக்கு பதிவுகள் போட்ட அன்றே கிடைக்காமல் அடுத்த நாள் தான் மினஞ்சலில் கிடைக்கிறதே !! ஏன்

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete